நீலகிரியில் கொரோனா வைரஸ் பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
கொரோனா வைரஸ் பரவுவதால், நீலகிரியில் உள்ள சுற்றுலாத்தலங்கள் மூடப்படுவதாக வதந்தியை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தை இணைக்கும் கேரள, கர்நாடக சோதனைச் சாவடியில் தொடர் கண்காணிப்பில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
நீலகிரியில் உள்ள தங்கும் விடுதிகளில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்தால் விடுதி உரிமையாளர்கள் உடனடியாக சுகாதாரத் துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும். சுற்றுலாப் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
கொரோனா வைரஸ் பாதுகாப்பு குறித்து நீலகிரியில் தீவிரமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க: கோழிக்கறி சாப்பிட்டால் கொரோனா வரும்: வதந்தியை கிளப்பியவர் கைது!