நீலகிரி: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்ததுள்ளன.
நீலகிரியில் 30க்கும் மேற்பட்ட பறக்கும் படை அமைக்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் வாகனச் சோதனை பணிகளில் அரசு அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக ஊட்டி அருகே உள்ள அதிகரட்டி பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில் தேர்தல் பறக்கும் படை குழு பணியில் இருந்தபோது, பெண் காவலருக்கு துணை வட்டாட்சியர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் காவலர், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, துணை வட்டாட்சியரை காவலர்கள், காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர், அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு விசாரணை: 36ஆவது கட்ட அமர்வுடன் நிறைவுபெற வாய்ப்பு