நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, குன்னூர் ஆகிய பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் லேசான மண் சரிவு ஏற்பட்டது.
கோத்தகிரியில் சுமார் 25 ஏக்கரில் வெள்ளைப் பூண்டு, முட்டைகோஸ், பீன்ஸ் போன்றவை பயிரிடப்பட்டன.
காட்டாற்று வெள்ளம் போல் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதில், அனைத்து பயிர்களும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன.
இதன் காராணமாக விவசாயிகளுக்கு லட்சக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு மாவட்ட நிர்வாகம் இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: மரக்காணத்தில் கனமழை - உப்பு உற்பத்தியாளர்கள் வேதனை!