நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில் வெலிங்டன் கண்டோன்மென்ட் வாரிய பகுதிகளில், ராணுவ வீரர்கள், ராணுவ குடும்பத்தினருக்கு மிலிட்டரி மருத்துவமனையில் தடுப்பூசி போடப்பட்டு வந்த போதும், வாரிய பகுதி மக்கள் குன்னூர் வந்து தடுப்பூசி இட்டு செல்வதால் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.
இந்நிலையில், வாரிய முதன்மை நிர்வாக அலுவலர் பூஜா பலிச்சா பரிந்துரையின் பேரில் கண்டோன்மென்ட் வாரிய மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் முரளி தலைமையில தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது.
இந்நிகழ்ச்சிக்கு, வாரிய சுகாதார ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். தினமும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தடுப்பூசி போடப்படுகிறது. தினமும் 200 பேர் வரை தடுப்பூசி போடப்படும் என மருத்துவ அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: குறைந்த கால அவகாசத்தில் அதிகபட்ச தடுப்பூசி