ETV Bharat / state

நீலகிரியில் அதிகரிக்கும் கரோனா: விழிப்புணர்வை தொடங்கிய தீயணைப்புத் துறையினர்!

ஊட்டி: நீலகிரியில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்துவருவதால், மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் குன்னூர் தீயணைப்புத் துறையினர் இன்று (அக். 16) முதல் விழிப்புணர்வைத் தொடங்கினர்.

நீலகிரியில் அதிகரிக்கும் கரோனா பரவல்: விழிப்புணர்வை தொடங்கிய தீயணைப்பு துறையினர்!

author img

By

Published : Oct 16, 2020, 5:44 PM IST

நீலகிரி மாவட்டம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்துவரும் நிலையில், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த அரசும், மாவட்ட நிர்வாகமும் உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து குன்னூர் தீயணைப்பு நிலையம் சார்பில் குன்னூர் பஸ் ஸ்டாண்ட், வி.பி. தெரு, லெவல் கிராசிங் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி இன்று (அக். 16) தொடங்கியது.

இதில் நிலைய அலுவலர் மோகன் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பாளர்கள் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முகக் கவசங்கள் முறையாக அணிவது குறித்து சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்றுவது குறித்து விளக்கமளித்தனர்.

நீலகிரியில் அதிகரிக்கும் கரோனா பரவல்: விழிப்புணர்வை தொடங்கிய தீயணைப்பு துறையினர்!

மேலும் ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை கட்டாயம் கைகளைக் கழுவ வேண்டும் எனவும், வாய் மூக்கு முழுமையாக மூடவும் வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து தினமும் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க...தமிழ்நாடு அரசின் முடிவுக்கு மு.க. ஸ்டாலின் பாராட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.