கரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி, நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, நீலகிரி மலை ரயிலை மார்ச் 18ஆம் தேதியில் இருந்து 31ஆம் தேதி வரை இயக்க தடைவிதித்து உத்தரவிட்டுள்ளார். அதனால் குன்னூர் - ஊட்டி மலை ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கொரோனா எதிரொலி: கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் ஹை அலர்ட்..