நீலகிரி மாவட்டம், குன்னூர் வெலிங்டன் கண்டோன்மெண்ட் வாரியத்தில், நல்லப்பன் தெரு மற்றும் சப்ளை டிப்போ பகுதிகளில் இருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பகுதிகளை, வெலிங்டன் கண்டோன்மெண்ட் வாரிய தலைவரும், எம்.ஆர்.சி., கமாண்டன்டருமான ராஜேஷ்வர்சிங், வாரிய முதன்மை நிர்வாக அதிகாரி பூஜா பலிச்சா, நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் இன்னசென்ட் திவ்யா மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இதையடுத்து மெட்ராஸ் ரெஜிமென்ட் ராணுவ மைய பகுதிகள் மூடப்பட்டு, வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதோடு, வெளியிடங்களில் இருந்து மையத்திற்கும், ராணுவ பயிற்சி கல்லூரிக்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஆட்சித் தலைவர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், ”மக்களின் அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஆனால் பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக சென்று தொற்று வாங்கி வருபவர்களால் நீலகிரி மக்களும் பாதிக்கப்படுகின்றனர். தேவையின்றி பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்போர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 4 காவலர்களுக்கு கரோனா - பாகாயம் காவல் நிலையம் மூடல்!