ஆண்டுதோறும் ஏப்ரல் மே மாதங்களில் நீலகிரி மாவட்டத்தில் நடைபெறும் கோடை விழாவை காண உள்நாடு மற்றும் வெளிநாடு என சுமார் 10 லட்சம் சுற்றுலா பயணிகள் இந்த மாவட்டத்திற்கு வருகை புரிகின்றனர். மே மாதம் முதல் வாரத்தில் கோத்தகிரியில் தொடங்கும் காய்கறி கண்காட்சி, கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி, உதகையில் ரோஜா கண்காட்சி மற்றும் மலர் கண்காட்சி , நிறைவாக குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழ கண்காட்சி நடைபெறுவது வழக்கம்.
ஆனால் தற்போது கரோனா வைரஸ் எதிரொலியாக புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான நீலகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் பல கோடி ரூபாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு இடங்களில் கரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் தோட்டக் கலைத் துறை சார்பில் சுமார் 5 ஆயிரம் பூந்தொட்டிகளில் ’வீட்டில் இரு பாதுகாப்பாய் இரு’ என்ற வாசகத்தை கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: