நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவப்பயிற்சி முகாமிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று(மே20) மாலை சென்றார். அவரை வரவேற்ற ராணுவ அலுவலர்கள், பின்னர் ராணுவ வாகனத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் நினைவு சதுக்கத்திற்கு அழைத்து வந்தனர்.
பின்னர் நினைவு சதுக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது ராணுவ வீரர்கள் பேண்டு வாத்தியங்கள் முழங்க அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் ராணுவ மையத்தின் குறிப்பேட்டில், ராணுவ மையம் குறித்த தனது கருத்தை எழுதினார்.பின்னர் ராணுவப்பயிற்சி கல்லூரிக்கு சென்று கல்லூரியின் கமான்டெண்ட் மோகன் உள்ளிட்ட அலுவலர்களுடன் கலந்துரையாடினார். அப்போது பயிற்சி கல்லூரி கமான்டென்ட் மோகன், முப்படை அலுவலர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விளக்கினார்.
இதனைத்தொடர்ந்து மூத்த ராணுவ அலுவலர்களுடன் கலந்துரையாடும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அங்கு நடைபெறும் விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். முதலமைச்சர் ஸ்டாலின் வருகையை முன்னிட்டு ராணுவப் பயிற்சி மைய வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இதையும் படிங்க:உலக பிரசித்தி பெற்ற ஊட்டி மலர் கண்காட்சி: மனைவியுடன் சென்று தொடங்கி வைத்த ஸ்டாலின்