ETV Bharat / state

தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பணிக்குச் செல்ல தடை! - tea estate workers tested possitive

நீலகிரி: கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக மூன்று நாட்களுக்கு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் பணிக்குச் செல்ல தடைவிதித்து குன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள்  குன்னூர் செய்திகள்  வண்டிச்சோலை கரோனா  coonoor vandisolai tea estate  tea estate workers tested possitive  coonoor tea estate
குன்னூர்: தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பணிக்கு செல்ல தடை
author img

By

Published : Jul 17, 2020, 8:55 AM IST

நீலகிரி மாவட்டம் குன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வண்டிச்சோலை ஊராட்சியிலுள்ள கோடமலையில் தனியார் தேயிலை எஸ்டேட் உள்ளது. இந்த எஸ்டேட்டில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில் அங்கு பணிபுரியும் தொழிலாளி ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் மூன்று நாட்கள் பணிக்குச் செல்ல தடை விதித்து குன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து வண்டிச்சோலை ஊராட்சித் தலைவர் மஞ்சுளா சதீஷ்குமார் தலைமையில் கோடமலை, எஸ்டேட் பகுதியில் கிருமிநாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும், 100க்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு கரோனா பதிப்பு உள்ளதா என சோதனையும் செய்யப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: குன்னூர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சருகு மான்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.