நீலகிாி மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக இரவு, பகல் பாராமல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே மண்சாிவு, நிலச்சாிவு ஏற்பட்டு போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதேபோல், மலை ரயில் பாதையில் ஆங்காங்கே பாறைகள், மரங்கள் விழுவதால் தண்டவாளங்கள் சேதமடைந்து மலை ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குன்னுாா் - மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் மழையின் காரணமாக ஆங்காங்கே பாறைகளுடன் மண்சாிவு, மரங்கள் விழுவதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி மீண்டும் 25 ஆம் தேதி வரை குன்னுாா் முதல் மேட்டுப்பாளையம் வரை, மேட்டுப்பாளையம் முதல் குன்னுாா் வரை என இரு மார்க்கத்திலும் இயக்கப்படும் மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
இதனிடையே, குன்னுாா் முதல் ஊட்டி வரை இயங்கும் மலைரயில் வழக்கம் போல் இயங்கும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: குன்னூர் ரயில் பாதையில் 3 நாட்களுக்கு சேவை ரத்து...!