குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நெடுஞ்சாலை மற்றும் மலை ரயில் பாதையில் பாறைகள் விழுந்தும் மண் சரிவு ஏற்பட்டும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
இதுமட்டுமின்றி குடியிருப்புப் பகுதிகளும் வழிபாட்டுத்தலங்களும் இடிந்துள்ளன. மழையால் குன்னூர் அருகேயுள்ள அம்மன் ஆலயத்தின் தடுப்புச் சுவர் சேதமடைந்துள்ளது. இதேபோல் குன்னூர் மவுண்ட் பிளசென்ட் பகுதியில் உள்ள சகாய மாதா தேவாலயத்தின் பின்புறச் சுவரும் இடிந்து விழுந்துள்ளது.
மேலும், தொடர் மழை பெய்தால் முற்றிலும் இடிந்து விழும் சூழல் உருவாகியுள்ளது. கன்னி மாரியம்மன் கோயில் பகுதியில் உள்ள மசூதியின் பின்புறம் இடிந்து, தண்ணீர் மசூதிக்குள் புகுந்ததால் சேதம் ஏற்பட்டுள்ளது.
இதனை சீரமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. பல இடங்களில் மழையால் இடிந்த வீடுகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் இதுவரை நிவாரணங்கள் வழங்கப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
இதையும் படிங்க: மழை காரணமாக ராட்சத பாறைகள் குடியிருப்பு பகுதிகளில் விழும் அபாயம்..!