நீலகிரி மாவட்டம், குன்னூர்ப் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாள் முதல் தன்னார்வ அமைப்பான கன்சர்வ் எர்த் பவுண்டேஷன் அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் வீடுகளில் முடங்கி இருக்கும் பொது மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை, வழங்கி வருவதுடன் குன்னூர்ப் பகுதியில் உள்ள பேருந்து நிலையம், மருத்துவமனை, உழவர் சந்தை, மவுண்ட் ரோடு போன்ற பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணியை நகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து செய்து வருகின்றனர்.
தற்போது கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட குன்னூர்ப் பகுதியைச் சேர்ந்தவர்களின், வீட்டைச் சுற்றியுள்ள அனைத்துப் பகுதியிலும் சீல் வைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள பொதுமக்களுக்கு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளதால், அத்தியாவசியப் பொருட்களை பாதுகாப்புடன் வீடுதோறும் சென்று வழங்கி வருகின்றனர்.
மேலும் பல ஆண்டுகளாகப் பராமரிப்பு இல்லாமல் இருந்த, அண்ணா சதுக்கத்தை புனரமைத்து செயற்கை நீர் ஊற்றி பராமரித்து வருகின்றனர். இச்செயலை செய்த குன்னூர்ப் பகுதியைச் சேர்ந்த தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த இளைஞர்களை, அப்பகுதி மக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: 144 தடை உத்தரவு: கழுகுப் பார்வையில் உதகை பகுதி!