நீலகிரி மாவட்டம், குன்னுார் சிம்ஸ் பூங்காவில், ஆண்டுதோறும் ஏப்ரம், மே மாத கோடை சீசனில் சுற்றுலாப் பயணிகளை கவருவதற்கு, தோட்டக்கலை துறை சார்பில், பழம் கண்காட்சி நடத்துவதுடன், அரிய மலர்கள் நடவு செய்யப்படும்.
இந்தாண்டு, அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளின், 'பிளாக்ஸ், ஆன்ட்ரினம், பால்சம், பெகோனியா, ஆப்ரிக்கன் மேரி கோல்டு, பிரஞ்ச் மேரி கோல்டு, பேன்சி, ஹோலிஹாக், டெல்பினியம், ஜெரானியம், பெட்டுனியா,ஸ்டாக், கேலன்டுலா, கேன்டிட் ப்ட், டயான்தஸ், கிளார்கியா, ஜின்னியா, ஸ்வீட் வில்லியம் வகைகளில் 2.50 லட்சம் மலர்கள் நடவு செய்யப்பட்டது.
முதல் முறையாக நடவு செய்த வெளிநாட்டு மலர்களான அகப்பான்தஸ், அமரல்லீஸ் உள்ளிட்ட மலர்கள் பூக்க தொடங்கியுள்ளது. இது சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் டான்சிங் டால் எனப்படும் ப்யூசியாமலர்கள் பூக்க தொடங்கியுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அதனைக் காண்பதற்கு ஆர்வத்துடன் வருகின்றனர். கோடை சீசனில் பூக்கள் அதிகமாக பூக்க தொடர்ந்து தோட்டக்கலைத் துறையினர் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: 'இன்பினிட்டி பார்க்' - மாற்றுத்திறனாளி சிறுவர்களின் உலகம்!