நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடும் வெயில் நிலவிவருகிறது. இந்த வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதிகள், அருகில் உள்ள தோட்டங்களில் தீ விபத்து ஏற்பட்டுவருகிறது. மேலும், பெரும்பாலான இடங்களில் சில சமூக விரோதிகள் தீ வைப்பதாலும் வனத்தீ ஏற்பட்டு மரங்கள், செடிகள் எரிந்து நாசமாகின்றன.
இந்நிலையில், இன்று குன்னூர் ரயில்பாதை அருகே வனத் தீ ஏற்பட்டது. இதில் ரயில் செல்லும் நேரத்தில் வனத் தீ பரவியதால், சுற்றுலாப் பயணிகள் அதனைக் கண்டு அச்சமடைந்தனர். இதுபோன்று வனத் தீ வைப்பவர்களை கண்காணிக்க ரயில்வே பாதுகாப்பு காவல் துறையினர் பணிகளை தொடங்கியுள்ளனர்.
இந்த வனத் தீயால் சுற்றுப்புற பகுதியில் மரங்கள், செடிகொடிகள் எரிந்து நாசமாகின. ரயில் பாதையில் தீ வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.