நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் நகராட்சி துப்புரவு தொழிலாளர்களுக்காக கட்டப்பட்ட அலுவலகம், அண்மையில் நீலகிரி தொகுதியில் எம்.பி. யாக இருந்த கோபாலகிருஷ்ணனின் எம்.பி. அலுவலகமாக மாற்றப்பட்டு செயல்பட்டு வந்தது. ஆனால் தற்போது அந்த அலுவலக கட்டடமானது, எந்த பராமரிப்பும் இல்லாமல் அதனை சுற்றி செடிக்கொடிகள் வளர்ந்து கலை இழந்துள்ளது.
மேலும், சமீபகாலமாக சமூக விரோதிகளின் தங்கும் விடுதி போல மாறியுள்ளது. இந்த அலுவலகத்தை சுற்றிலும் பொருத்தப்பட்டிருந்த தெருவிளக்குகள் உடைக்கப்பட்டு இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
இரவு நேரங்களில் தவறான பயன்பாட்டிற்கும், மது அருந்துவதற்கும் இந்த இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு சமூக விரோதிகளால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அரசாங்க கட்டடம் இப்படி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை கண்டு ஆத்திரமடைந்த ஊர் பொதுமக்கள், மீண்டும் பழைய முறையில், நகராட்சி தொழிலாளர்களுக்கு இந்த கட்டடம் பயன்படுத்த அனுமதி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வைத்துள்ளனர்.