ETV Bharat / state

மருந்து, காய்கறிகள் கிடைக்காமல் குன்னூர் மக்கள் தவிப்பு - The people of Coonoor suffer from lack of vegetables

நீலகிரி: தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது முதல் அனைத்து அத்தியாவசிய பொருள்களும் வழக்கம்போல் கிடைக்கும் என தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது. ஆனால், குன்னூரில் மருந்துக் கடைகள் முதற்கொண்டு மூடப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

Coonoor medicals locked
Coonoor medicals locked
author img

By

Published : Apr 3, 2020, 8:05 PM IST

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியிலிருந்து டெல்லிக்குச் சென்று வந்ததாக ஒரு நபரை ஊட்டி அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தியுள்ளனர். மேலும் அவர் குன்னூரில் தங்கியிருந்த குடியிருப்பு பகுதியைச் சுற்றி ஐந்து கிலோமீட்டர் தொலைவு வரை உள்ள கடைகளைப் பூட்டி, வீடுகளை விட்டு பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குன்னூர் நகர் பகுதிக்கு அருகில் அவரது குடியிருப்பு உள்ளதால் மருந்துக் கடைகள், காய்கறி கடைகள் பால் விற்பனை முதற்கொண்டு மூடப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். குழந்தைகள் உள்ள வீடுகளில் பால் இல்லாததால் அத்யாவசிய பொருள்களின்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர். காய்கறிகள், மருந்துக் கடைகள் இல்லாததால் குன்னூர் அருகே உள்ள பாய்ஸ் கம்பெனி, அருவங்காடு உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

குன்னூர் பகுதியில் உள்ள மக்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் கிடைக்க அரசு அலுவலர்கள் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: பெரம்பலூரில் மாஸ்க் அணிந்து ரேசன் பொருள்கள் வாங்கிச்சென்ற மக்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.