ETV Bharat / state

முதல் சீசனுக்கு தயாராகிறது குன்னூர் காட்டேரி பூங்கா! - Coonoor kattery park flower plantation

நீலகிரி: இயற்கை சூழலில் அமைந்துள்ள குன்னூர் காட்டேரி பூங்காவில் முதல் சீசனுக்காக ஒன்றரை லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணி தொடங்கியது.

Coonoor kattery park  Coonoor kattery park flower plantation  குன்னூர் காட்டேரிப் பூங்கா
குன்னூர் காட்டேரிப் பூங்காவில் மலர் நாற்றுகள் நடும் பணி தொடக்கம்
author img

By

Published : Mar 9, 2020, 11:52 PM IST

நீலகிரி மாவட்டம்- குன்னூரிலிருந்து சுமார் ஆறு கிலோ மீட்டர் தொலைவில் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் தமிழ்நாடு தோட்டக்கலை நிர்வாகத்தின் கீழ் காட்டேரி பூங்கா அமைந்துள்ளது. இந்தப் பூங்காவில் முதல் மற்றும் இரண்டாம் சீசனுக்கு புதிய மலர் நாற்றுகள் நடவு செய்வது வழக்கம்.

எதிர்வரும் ஏப்ரல், மே மாதங்களில் தொடங்கவுள்ள முதல் சீசனுக்காக ஒன்றரை லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணி தொடங்கியது. ஆன்ட்ரினம், பெட்டூனியா, பெகோனியா, பேன்சி, சால்வியா, ஆஸ்டர் உள்ளிட்ட முப்பது வகையான மலர் நாற்றுகள் நடவு செய்யப்படவுள்ளன.

குன்னூர் காட்டேரிப் பூங்காவில் மலர் நாற்றுகள் நடும் பணி தொடக்கம்

இந்த மலர் நாற்றுகளை உற்பத்தி செய்வதற்கு விதைகள் ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து, பஞ்சாப், கொல்கத்தா, காஷ்மீர் ஆகிய பகுதிகளிலிருந்து பெறப்பட்டன. இந்த மலர் நாற்றுகளை நடவு செய்யும் பணியை குன்னூர் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் பெபிதா தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் தோட்டக்கலை அலுவலர்கள், விவசாயிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: மகளிர் தினத்தை முன்னிட்டு சிஏஏவுக்கு எதிராக பெண்கள் பேரணி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.