நீலகிரி மாவட்டத்தில் உறைபனி பொழிவு சமீபத்தில் தொடங்கியது. குன்னூர் நகரம் மற்றும் அதன் புறநகர் பகுதிகளான பந்துமை, வெலிங்டன் மற்றும் அருவங்காடு உள்ளிட்ட பகுதிகளில் உறைபனி பொழிவு சில நாட்களாக அதிகரித்து காணப்பட்டது.
இதனால் புல்வெளி மைதானங்கள் மற்றும் வாகனங்கள் மீது உறைபனி கொட்டியிருந்ததால், குன்னூர் குட்டி காஷ்மீர்போல் பனி படர்ந்து காட்சியளித்தது. வெப்பநிலையானது குன்னூர் நகரில் 2.8 டிகிரி செல்சியஸ் ஆகவும், சமவெளி பகுதிகளில் 0 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகியுள்ளது. இந்த உறைபனி பிப்ரவரி மாதம் இறுதி வரை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் துணிவு பட கொண்டாட்டத்தின் போது ரசிகர் உயிரிழப்பு