நீலகிரி மாவட்டத்தில், தற்போது, வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால், செடி, கொடிகள் மரங்கள் போன்றவை காய்ந்து எளிதில் தீப்பற்றக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
இதனால், பல இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டுவருகிறது. இதனிடையே குன்னூர் அருகேயுள்ள சரவணமலை பகுதியில் 20 ஏக்கர் பரப்பளவில் அரியவகை மூலிகை, மருத்துவ குணமுள்ள செடி-கொடிகள் தீயில் கருகி நாசமாகின.இந்த நிலையில் நேற்று மாலை பற்றிய தீயை அணைக்க இரவு முழுவதும் தீயணைப்பு துறையினர் போராடினர்.
எனினும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் பரவி வருகிறது. இந்த தீ விபத்தில் காட்டுப்பன்றிகள், முயல்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
இந்நிலையில் தீயை அணைக்கநீலகிரி நகராட்சியின் சார்பில்தண்ணீர் வழங்கப்படாததால், தீயை அணைக்க முடியாமல் சிரமம் ஏற்பட்டுள்ளது. வனப்பகுதிகளில் தீ வைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்மென வலியுறுத்தப்பட்டுள்ளது.