ETV Bharat / state

தலைவிரித்தாடும் தண்ணீர் தட்டுப்பாடு! குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர்!

நீலகிரி: குன்னூர் பகுதிகளில் குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் தண்ணீரால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர். அலுவலர்கள் குழாய் உடைப்புகளை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

author img

By

Published : Jun 10, 2019, 10:02 AM IST

coonoor

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் உள்ள 30 வார்டுகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வசித்துவருகின்றனர். இவர்களுக்கு குடிநீர் ரேலியா அணை, கரன்சி தடுப்பணை, ஜிம்கானா தடுப்பணை ஆகியவற்றிலிருந்து விநியோகம் செய்யப்பட்டுவருகிறது.

மேலும், குடிநீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த ராட்சத குழாய்களில் மவுண்ட் பிளசன்ட், மோரிஸ் கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு நாள்தோறும் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் சாலையில் வீணாக வழிந்தோடுகிறது.

குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் தண்ணீர்

இது குறித்து குன்னூர் நகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை தகவல் தெரிவித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதேபோன்று வெலிங்டன் கன்டோன்மெண்ட் பகுதியிலும் பொதுமக்களுக்கு செல்லும் குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு பல நாட்களாகியும் உடைப்பை சரிசெய்யாமல் அலுவலர்கள் மெத்தனம் காட்டிவருவதாக குற்றம்சாட்டும் பொதுமக்கள், தற்போது நீலகிரி மாவட்டத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுவரும் நிலையில், இதுபோல் குடிநீர் குழாய்கள் உடைப்பை ஊழியர்கள் சரி செய்யாமல் மெத்தனம் காட்டுவது மேலும் அதிக அளவில் குடிநீர் தட்டுப்பாட்டை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே, உடனடியாக இந்தக் குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்புகளை முறையாக சரி செய்து, குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Intro:குன்னூர் பகுதிகளில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீர் பொதுமக்கள் பாதிப்பு

Body:குன்னூர் பகுதிகளில் 30 வார்டுகள் உள்ளன இவற்றில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர் இவர்களுக்கு ரேலியா அணை கரன்சி தடுப்பணை ஜிம்கானா தடுப்பணை போன்றவற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது மேலும் குடிநீர் தேக்க தொட்டி களுக்கு ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது இந்த ராட்சத குழாய்களில் மவுண்ட் பிளசன்ட் மோரிஸ் கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு நாள்தோறும் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் சாலையில் வீணாக வழிந்தோடுகிறது இதுகுறித்து குன்னூர் நகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கை மேற்கொள்வது இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் இதேபோன்று வெலிங்டன் கண்டோன்மெண்ட் பகுதியிலும் பொதுமக்களுக்கு செல்லும் குடிநீர் குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு பல நாட்களாகியும் உடைப்பை சரிசெய்யாமல் மெத்தனம் காட்டி வருகின்றனர் தற்போது நீலகிரி மாவட்டத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வரும் நிலையில் இதுபோல குடிநீர் குழாய்கள் உடைப்பை ஊழியர்கள் சரி செய்யாமல் மெத்தனம் காட்டுவது மேலும் அதிக அளவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர் உடனடியாக இந்த குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்புகளை முறையாக சரி செய்து பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.