முல்தான்: இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதில் பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முல்தான் நகரில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷான் மசூத் பேட்டிங்கை தேர்வு செய்தார். பாகிஸ்தானின் இன்னிங்சை சையிம் அயூப், மற்றும் அப்துல்லா ஷபீக் ஆகியோர் தொடங்கினர். இதில் சையிம் அயூப் வெறும் 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அதன் பின் ஷபீக்குடன் கேப்டன் ஷான் மசூத் கைகோர்த்தார்.
UNBELIEVABLE CATCH 😲
— Pakistan Cricket (@TheRealPCB) October 8, 2024
Aamir Jamal pucks it out of thin air to send back the England captain 👌#PAKvENG | #TestAtHome pic.twitter.com/MY3vsto4St
இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவில் இருந்து மீட்டனர். அபாரமாக விளையாடிய இருவரையும் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களால் எளிதில் வீழ்த்த முடியவில்லை. அபாரமாக விளையாடிய அப்துல்லா ஷபீக் (102 ரன்) சதம் விளாசிய கையோடு ஆட்டமிழந்தார்.
நீண்ட நாட்களுக்கு பின் ஷபீக் உள்ளூரில் சதம் விளாசி மீண்டும் பார்முக்கு திரும்பினார். சிறுது நேரத்தில் கேப்டன் ஷான் மசூத்தும் 151 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இருவரும் அபாரமாக விளையாடி அணியை 260 ரன்களுக்கு மேல் கொண்டு சென்றனர். அடுத்து களமிறங்கிய பாபர் அசாம் (30 ரன்) இந்த முறையும் ஜொலிக்கவில்லை.
World-class ✨#PAKvENG | #TestAtHome pic.twitter.com/f19TsTiMeP
— Pakistan Cricket (@TheRealPCB) October 8, 2024
விரைவாக ஆட்டமிழ்ந்து ஏமாற்றம் அளித்தார். அதன் பின் தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் பெரிய அளவில் சோப்பிக்கவில்லை. சவுத் சகீல் மட்டும் நிலைத்து நின்று விளையாடி 82 ரன்கள் குவித்தார். கடைசி கட்டத்தில் பாகிஸ்தானின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறிய அப்கா சல்மான், இங்கிலாந்து அணிக்கு கடும் குடைச்சலை கொடுத்தார்.
அபாரமாக விளையாடிய அப்கா சல்மான் சதம் விளாசினார். இறுதியில் பாகிஸ்தான் அணி 149 ஓவர்கள் முடிவில் 556 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பாகிஸ்தான் அணியில் அப்கா சல்மான் 104 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார். இங்கிலாந்து அணியில் ஜேக் லீச் 3 விக்கெட்டும், கஸ் அட்கின்சன், பிரய்டன் கேர்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், சோயிப் பஷிர், கிறிஸ் வோக்ஸ், ஜோ ரூட் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
Making headlines on day two 🙌@SalmanAliAgha1 walks off unbeaten at 1️⃣0️⃣4️⃣ off 1️⃣1️⃣9️⃣ balls#PAKvENG | #TestAtHome pic.twitter.com/QM4qZ6wtwW
— Pakistan Cricket (@TheRealPCB) October 8, 2024
தொடர்ந்து முதல் இன்னிங்சில் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் கேப்டன் ஒலி போப் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். தொடர்ந்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது.
இதையும் படிங்க: இந்தியா-வங்கதேசம் டி20 தொடருடன் ஓய்வு பெறும் முக்கிய நட்சத்திரம்? என்ன காரணம்?