ETV Bharat / bharat

ஹரியானாவில் 3வது முறையாக பாஜக ஆட்சி.. அதீத நம்பிக்கையால் வாய்ப்பை இழந்ததா காங்கிரஸ்?

ஹரியானாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் பாஜக 48 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. 36 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்று காங்கிரஸ் எதி்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 3 hours ago

Updated : 3 hours ago

ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணும் பணி
ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணும் பணி (image credits-PTI)

ஹைதராபாத்: ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது.

ஹரியானாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்ற 90 தொகுதிகளில் 89 தொகுதிகளின் முடிவுகள் வெளியாகி விட்டன. பாஜக 48 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு தொகுதியில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 36 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஐஎன்எல்டி இரண்டு தொகுதிகளிலும், இதர கட்சிகள் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

முதலமைச்சர் நயாப் சிங் சைனி தாம் போட்டியிட்ட லாத்வா சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். வெற்றி பெற்றதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், லாத்வா தொகுதி மக்களுக்கும், ஹரியானாவின் 2.80 கோடி மக்களுக்கும் நன்றி சொல்ல கடமை பட்டிருக்கின்றேன். இந்த வெற்றி பிரதமர் நரேந்திர மோடிக்கு கிடைத்த வெற்றி. பிரதமர் மோடியின் கொள்கைகளுக்கு ஹரியானா மக்கள் அங்கீகாரம் அளித்துள்ளனர்," என்றார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் பூபேந்தர் சிங் ஹூடா தாம் போட்டியிட்ட கார்கி சாம்ப்ளா கிலோய் தொகுதியில் 1,08,593 வாக்குகளை பெற்று 71,465 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் மஞ்சு 37,074 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

ஹரியானாவின் ஜூலானா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட பிரபல மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது முன்னிலையில் இருந்தார். பின்னர் சில சுற்றுக்களில் பின் தங்கினார். இறுதியில் 65,080 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் யோகேஸ் குமார் 59,065 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

காங்கிரஸ் தோற்றது ஏன்?: ஹரியானாவில் நயாப் சிங் சைனி தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக கடும் அதிருப்தி அலை இருந்தது. குறிப்பாக விவசாயிகள் பாஜக ஆட்சி மீது அதிருப்தியில் இருந்தனர். தேர்தலுக்கு முன்பு கடந்த மே மாதம் பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை மூன்று சுயேட்சை எம்எல்ஏக்கள் திடீரென விலக்கிக் கொண்டனர். ஜாட் சமூகத்தை சேர்ந்த இவர்களின் ஆதரவை பாஜக இழந்தது. எனவே இது பாஜகவுக்கு பெரும் பின்னடவாக கருதப்பட்டது.

ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல் நான்கு முனை போட்டியாக இருந்தது. காங்கிரஸ்-ஆம் ஆத்மி இடையே கூட்டணி பேச்சுவார்த்தைகள் இழுபறியில் முடிந்ததால் கடைசி நேரத்தில் காங்கிரஸ், ஆம் ஆத்மி இரண்டும் தனித்தனியே போட்டியிட்டன. பாஜக தனியாகவும், பகுஜன் சமாஜ் கட்சி- இந்திய தேசிய லோக் தள் கட்சி கூட்டணி தனியாகவும் போட்டியிட்டன. இவ்வாறு நான்கு முனை போட்டி நிலவியது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகளில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்றும் தனித்து ஆட்சி அமைக்கும் என்றும் கூறப்பட்டது. ஆனால், இன்று வெளியான தேர்தல் முடிவுகள் கருத்து கணிப்புகளுக்கு எல்லாம் மாறாக இருக்கிறது.

ஹரியானாவின் மூத்த தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான பூபேந்தர் சிங் ஹூடா மீது காங்கிரஸ் தலைமை அதீத நம்பிக்கை வைத்து விட்டது என்று அந்த மாநிலத்தின் காங்கிரஸ் நிர்வாகிகள் சொல்கின்றனர். ஜாட் வாக்குகள் அதிகம் நிறைந்த 14 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஹூடாவின் பேச்சை அப்படியே கேட்பார்கள். அத்தனை தொகுதியும் நமக்குத்தான் என்று காங்கிரஸ் தலைமை நம்பியது. கடந்த 2019ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 14 ஜாட் தொகுதிகளில் 11 தொகுதிகளில் காங்கிரஸ் வென்றது. ஆனால், இந்த முறை ஜாட் ஓட்டுகள் காங்கிரஸ் கட்சிக்கு கைகொடுக்கவில்லை என்று லோக்கல் காங்கிரஸ் நிர்வாகிகள் சொல்கின்றனர்.

அதே நேரத்தில் ஹரியானா காங்கிரஸ் மூத்த தலைவர் பூபேந்தர் சிங் ஹூடா, மற்றும் இன்னொரு தலைவரான குமாரி செல்ஜா இடையே யார் முதலமைச்சர் வேட்பாளர் என்ற போட்டி நிலவியது. இவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி ஒரே அணியில் திரட்ட காங்கிரஸ் மேலிடம் முயற்சிக்கவில்லை. மேலும், ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பூபேந்தர் சிங் ஹூடாவின் ஆதரவாளர்கள். எனவே குமாரி செல்ஜா ஆதரவாளர்கள் ஹூடாவின் வேட்பாளர்களை காலை வாரி விட்டிருக்கலாம் என்று கூறுகின்றனர்.

பூபேந்தர் ஹூடா ஜாட் சமூகத்தினரின் தலைவராக முன் நிறுத்தப்பட்டதால் ஜாட் அல்லாத பிற சமூகத்தினர் பாஜகவுக்கு வாக்களித்திருக்கின்றனர் என்றும் தெரியவருகிறது. குறிப்பாக மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்த பட்டியலினத்தை சேர்ந்த வாக்காளர்கள் கூட இந்த முறை பாஜகவுக்கு வாக்களித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு கைகொடுத்தது முஸ்லீம் வாக்குள் மட்டும்தான் என்று ஹரியானா தேர்தல் நிலவரம் கூறுகிறது. குறிப்பாக நுஹ், ஃபெரோஸ்பூர் ஜிர்கா மற்றும் புனாஹானா ஆகிய முஸ்லீம்கள் அதிகம் உள்ள தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றியை நோக்கி பயணிக்கிறது.

அதே போல அதீத நம்பிக்கையின் விளைவாக ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைக்க தவறியதும் சில இடங்களில் காங்கிரஸ் தோல்விக்கு காரணமாக கூறப்படுகின்றன. ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முன்னாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் ஹரியானா மாநிலம் பிஸ்வானி மாவட்டம் ஷிவானி பகுதியில் பிறந்தவர். எனவே, மண்ணின் மைந்தருக்கு வாக்களியுங்கள் என்று கேட்டு ஆம் ஆத்மியினர் பரப்புரை மேற்கொண்டனர். ஆனால், ஆம் ஆத்மி தரப்பில் யார் முதலமைச்சர் வேட்பாளர் என்பதை முன் வைக்கவில்லை. எனவே அந்த கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. பல இடங்களில் சுயேட்சைகளை விடவும் ஆம் ஆத்மி பின் தங்கி இருந்தது.

Last Updated : 3 hours ago
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.