நீலகிரி மாவட்டத்தின் வனப்பகுதியையொட்டியுள்ள இடம் குன்னூர் பேருந்து நிலையம். இங்கு ஒற்றை காட்டெருமை திடீரென வந்ததுள்ளது. இதைக் கண்ட பொதுமக்கள் அங்கிருந்து அலறியடித்து ஓடியுள்ளனர். வனத் துறையினரும் உரிய நேரத்தில்அங்கு வராததால் காட்டெருமை அப்பகுதியில் வெகுநேரம் சுற்றியுள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்றம் நீடித்தது.
சமீபகாலமாக வன விலங்குகள் உணவு, தண்ணீருக்காக குடியிருப்பு பகுதிக்குல் வந்துகொண்டிருக்கின்றன. கடந்த மாதத்தில் மட்டும் காட்டெருமை தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். எனவே, பொதுமக்களுக்கு உயிர் சேதம் ஏற்படும் முன் வனத் துறையினர் பாதுகாப்பளித்து வன விலங்குகளை அடர்ந்த வனத்திற்குள் விரட்ட வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.