ETV Bharat / state

ஓட்டுநர்களிடையே மோதல்: உதகையில் ஆட்டோக்கள் ஓடாததால் பொதுமக்கள் பாதிப்பு - ஆட்டோ ஓட்டுநனர்களிடையே மோதல்

நீலகிரி: உதகையில் இருதரப்பு ஓட்டுநர்களிடையே ஏற்பட்ட மோதலால் ஆட்டோக்கள் ஓடவில்லை. இதனால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்படைந்தனர்.

மோதலில் ஆட்டோ ஓட்டுநனர் ஒருவருக்கு தலையில் ஏற்ப்பட்ட காயம்

author img

By

Published : Mar 7, 2020, 10:35 AM IST

நீலகிரி மாவட்டம் உதகையில் சுமார் 700 ஆட்டோக்கள் இயங்கிவருகின்றன. ஆட்டோ ஓட்டுநர்கள் உதகை நகரத்தில் மக்களின் தேவைக்கு ஏற்ப தாவரவியல் பூங்கா, சந்தை, பேருந்து நிலையம் உள்ளிட்ட பல பகுதிகயில் ஆட்டோவை நிறுத்தி இயக்கிவருகின்றனர்.

இந்நிலையில் எல்க்ஹில் என்னும் பகுதி ஆட்டோ ஒட்டுநர்களுக்கும், ஏ.டி.சி. பகுதி ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் கடந்த எட்டு மாதங்களாகவே சவாரி ஏற்றுவதில் தகராறு இருந்துவந்தது. இது தொடர்பாகக் காவல் நிலையத்திலும் புகார் தெரிவிக்கப்பட்டது.

மேலும், எல்க்ஹில் ஆட்டோ ஓட்டுநர்கள் 15 பேர், உதகையில் இயங்கிவந்த ஆட்டோ ஓட்டுநர் நலச்சங்கத்திலிருந்து பிரிந்து, தனி நலச்சங்கம் தொடங்கி ஆட்டோக்களை இயக்கிவந்தனர். பல நாள்களாகவே பயணிகளை ஏற்றிச்செல்வதில் இரு சங்கத்தினர்களுக்கும் வாக்குவாதம் ஏற்படுவது வழக்கம்.

ஆட்டோ ஓட்டுநனர்களிடையே மோதல்

இந்நிலையில் இன்று இருதரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ஆட்டோவில் பயணித்த பெண் உள்பட இரண்டு ஆட்டோ ஓட்டுநர்கள் சிறிய காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

எனவே, உதகையில் இரவு வரை ஆட்டோக்கள் இயங்கவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்படைந்தனர்.

இதையும் படிங்க: தலையில் கல்லை போட்டு கொல்ல முயற்சி: நெஞ்சை உறைய வைக்கும் சிசிடிவி காட்சி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.