உலகம் முழுவதும் நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் கிறிஸ்துவ மக்கள் அனைவரும் கேக் வெட்டி ஏசு பிறப்பை கொண்டாடுகின்றனர். தற்போது குன்னூரில் உள்ள பேக்கரிகளில் பல்வேறு வகையான கேக்குகள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதில் குறிப்பாக பிளம் கேக், ஐஸ் கேக், ப்ளூபெரி கேக், வெண்ணிலா கேக், ஒயிட் பாரஸ்ட் போன்ற கேக்குகள் தயாரிக்கும் பணி இரவும் பகலுமாக நடைபெற்று வருகிறது. சென்ற ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு கேக் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. இருந்த போதிலும் கிறிஸ்துமஸ் விழாவில் கேக் முக்கிய பங்காற்றுவதால் தற்போது இதனை அதிகளவில் மக்கள் வாங்கி வருகின்றனர். மேலும், முன்பதிவு மூலம் பேக்கரிகளில் கேக் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: மதுரையில் பட்டையக் கிளப்பும் பனங்கிழங்கு வியாபாரம்.!