நீலகிரி மாவட்டம், குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது கடும் பனி மூட்டத்துடன் கூடிய மழை பெய்து வருகிறது. கடும் குளிர் காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்கள் அவதி
அதிகாலையில் கடும் குளிர் நிலவுவதால் கேரட் அறுவடை தொழில்களில் ஈடுபடும் தொழிலாளர்கள் கடும் அவதியடைந்துள்ளனர். கடும் குளிரில் நடுங்கியபடி, தொழிலாளர்கள் தங்களது வேலைகளை செய்கின்றனர்.
கடும் பனி மூட்டம்
ஆண்டுதோறும் டிசம்பர் மாதங்களில் உறைபனி விழுவது வழக்கம். ஆனால், தற்போதுவரை உறைபனி விழாமல் கடும் பனி மூட்டம் மட்டுமே நிலவிவருவதால் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
இதையும் படிங்க: திம்பம் மலைப்பாதையில் கடும் பனிமூட்டம்