நீலகிரி மாவட்டம் அதிக வனப்பகுதிகளை கொண்டுள்ளது. இங்கு புலி, மான், காட்டெருமை போன்ற பல்வேறு விலங்குகள் வாழ்ந்துவருகின்றன. இந்த வன விலங்குகள் அடிக்கடி உணவு தேடி ஊருக்குள் வருவது வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி பகுதிகளில் அதிகளவில் வனவிலங்குகளின் நடமாட்டத்தை காணமுடியும்.
அந்த வகையில், கோத்தகிரி பகுதியில் ஊருக்குள் நுழைந்த காட்டெருமை ஒன்று, தவறுதலாக குழிக்குள் விழுந்துள்ளது. வெளியே வர முடியாமல் தவித்த அந்தக் காட்டெருமையின் சத்தத்தை கேட்டு அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் விரைந்த வனத்துறை அலுவலர்கள், சுமார் 4 மணி நேரம் போராடியும் மீட்க முடியாததால் ஜேசிபி உதவியுடன் காட்டெருமையை மீட்டனர். இதில், காட்டெருமைக்கு பலத்த காயம் ஏற்பட்ட காரணத்தினால், சிறிது நேரத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தது.
இதையும் படிங்க: குளத்தில் மூழ்கியவர்களைக் காப்பாற்ற சென்ற இளம் பெண் உட்பட மூவர் உயிரிழப்பு