மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரியத்தில் கட்டடங்கள் கட்டுவதற்குப் பல்வேறு விதிமுறைகள் உள்ளன.
ஆனால் அனுமதியின்றி பல்வேறு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து கன்டோன்மென்ட் வாரியம் சார்பில் 104 கட்டடங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இதில் பாய்ஸ் கம்பெனி அருகே உள்ள அன்னை இந்திரா நகர் பகுதியில் அனுமதியின்றியும், ஆக்கிரமிப்பு செய்தும் கட்டடம் கட்டப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட கட்டடத்தின் உரிமையாளர் உயர் நீதிமன்றத்தில் தடை உத்தரவு கோரி மனு தாக்கல்செய்திருந்தார். எனினும் அனுமதி பெறாமல் இருந்ததாலும், ஆக்கிரமிப்பு காரணமாகவும் வாரிய ஊழியர்கள் காவல் துறையினரின் பாதுகாப்புடன் வீட்டை இடித்து அப்புறப்படுத்தினர்.
இது குறித்து, வீட்டின் உரிமையாளர்கள் தரப்பில் கூறுகையில், நீதிமன்றத்தில் தடையாணை உத்தரவு பெறப்பட்டுவந்ததாகவும், அதற்குள் உரிமையாளர் வீட்டில் இல்லாத நேரத்தில் இடித்ததாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: 'ஆக்ஸிஜன் உற்பத்திக்கு ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும்' எல்.முருகன் கோரிக்கை!