தெப்பக்காடு பகுதி ஆதிவாசி மக்களுடன் மசினகுடி காவல் நிலையம் சென்ற சிறுவன், அமைச்சர் மீது தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்துள்ளார். மனுவைப் பெற்றுக் கொண்ட காவல்துறையினர் அச்சிறுவனை இன்று (வெள்ளிக்கிழமை) காலை காவல் நிலையத்திற்கு வருமாறு கூறி அனுப்பி வைத்துள்ளனர்.
முன்னதாக, நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கான புத்துணர்வு முகாம் தொடக்க நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார். அங்குள்ள விநாயகர் கோயிலில் யானைகள் செய்த பூஜையிலும் பங்கேற்றார்.
கோயிலுக்குள் செல்லுமுன் சீனிவாசன் தனது காலணியை அங்கு விளையாடிக் கொண்டிருந்த பழங்குடியின சிறுவனை அழைத்து, கழற்றுமாறு பணித்தார். அதைத் தொடர்ந்து அமைச்சரின் காலணியைச் சிறுவன் கழற்றிய நிகழ்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அமைச்சரின் இச்செயலுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் கண்டனம் எழுந்தது. இதைத்தொடர்ந்து, உதகையில் செய்தியாளர்களைச் சந்தித்த சீனிவாசன், தனது செயலுக்கு வருத்தம் தெரித்தார்.
இதையும் படிங்க: ‘அரசியலில் ரஜினி ஒரு கேம் சேஞ்சராக இருப்பார்’ - சீனிவாசன்