ETV Bharat / state

பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தை உயிருடன் மீட்பு! - ooty baby found

நீலகிரி: உதகை தாவரவியல் பூங்கா அருகே உள்ள வனப் பகுதியில் பிறந்து சில மணி நேரமேயான ஆண் குழந்தையை அப்பூங்காவில் பணிபுரியும் ஊழியர்கள் மீட்டனர்.

baby found in ooty garden
author img

By

Published : Oct 7, 2019, 7:45 AM IST

Updated : Oct 7, 2019, 8:01 AM IST

நீலகிரி மாவட்டம் உதகையில் அரசு தாவரவியல் பூங்கா அமைந்துள்ளது. இங்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்துவருகிறனர். இவர்களுக்காக பூங்காவில் குடியிருப்புகளும் உள்ளன. வனப் பகுதியை ஒட்டியுள்ள இந்தக் குடியிருப்புகளில் உள்ள ஊழியர்கள் வழக்கம் போல் பூங்கா பணிக்காக காலை 8:30 மணிக்குச் சென்றனர்.

அப்போது வனப் பகுதியில் குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. இச்சத்தம் கேட்டு ஊழியர்கள் அருகே சென்று பார்த்தபோது, பிறந்து சில மணி நேரமேயான குழந்தையை யாரோ வீசிச் சென்றுள்ளார்கள் என்பது தெரியவந்தது. உடனடியாக ஊழியர்கள் 108 அவரச ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த மருத்துவக்குழுவும், காவல் துறையினரும் குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். உயிருடன் மீட்கப்பட்ட ஆண் குழந்தைக்கு மருத்துமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இது தொடர்பாக உதகை நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிக்க: லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கு: மூன்றாவது நபர் கைது!

Intro:OotyBody:உதகை 06-10-19
உதகை தாவரவியல் பூங்கா அருகே உள்ள வனப்பகுதியில் பிறந்த 1 மணி நேரமான ஆண் குழந்தை உயிருடன் மீட்பு. மீட்க்கபட்ட குழந்தைக்கு அரசு மருத்துமனையில் தீவிர சிகிச்சை.
நீலகிரி மாவட்டம் உதகையில் அரசு தாவரவியல் பூங்கா அமைந்துள்ளது. இங்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறனர். இவர்களுக்காக பூங்காவில் குடியிருப்புகள் உள்ளன. இது மட்டுமின்றி தோடரின கிராமம் இங்கு உள்ளது. வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்த குடியிருப்புகளில் உள்ள ஊழியர்கள் வழக்கம் போல் இன்று பூங்கா பணிக்காக காலை 8;:30 மணிக்கு சென்றுள்ளனர். அப்போது வனப்பகுதியில் குழந்தை அழும் சப்தம் கேட்டுள்ளது. அருகே சென்று பார்த போது பிறந்த குழந்தையை யாரோ வீசி சென்றுள்ளது தெரியவந்தது. உடனடியாக ஊழியர்கள் 108-க்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த மருத்துவ குழுவும், காவல்துறையினரும் குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி கொண்டு சென்றனர். உயிருடன் மீட்க்கபட்ட ஆண் குழந்ததைக்கு மருத்துமனையில் தீவிர சிகிச்சை அளிக்கபட்டடு வருகிறது. இது தொடர்பாக உதகை நகர காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்ககொண்டு வருகின்றனர்.Conclusion:Ooty
Last Updated : Oct 7, 2019, 8:01 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.