ETV Bharat / state

உதகையில் சுற்றுலா பயணிகளுக்காக படகுகள் சீரமைக்கும் பணி தீவிரம்! - சுற்றுலா தளம்

உதகை: கோடை சீசனையொட்டி உதகை படகு இல்லத்திற்கு வரும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளுக்காக படகுகள் சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

உதகை
author img

By

Published : Apr 22, 2019, 5:16 PM IST

உதகையில் தற்போது கோடை சீசன் தொடங்கி இருப்பதால் இதமான காலநிலை காணப்படுகிறது. எனவே குளு, குளு காலநிலையில் சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு வர தொடங்கியுள்ளனர். குறிப்பாக தமிழக சுற்றுலாத்துறை கட்டுபாட்டில் செயல்பட்டு வரும் அரசு படகு இல்லத்தில் படகு சவாரி செய்ய ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்து வருவதால் உதகை படகு இல்லத்தில் கோடை சீசன் களைகட்டி உள்ளது.

சுற்றுலா பயணிகளுக்காக மிதிபடகு சவாரி, மோட்டார் படகு சவாரி, துடுப்பு படகு சவாரி என மூன்று விதமான படகு சவாரிகள் விடப்பட்டுள்ளது. தற்போது 133 படகுகள் இயங்கி வரும் நிலையில் தொடர்ந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கோடை சீசனுக்கு வரக்கூடும் என்பதால் படகுகள் சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.

இப்பணிகள் விரைவில் முடிக்கபட்டு சுற்றுலா பயணிகளின் தேவைக்கு ஏற்ப படகுகள் விடப்படும் எனவும், படகு சவாரியின் போது அத்துமீறும் செயல்களில் ஈடுபடுவபர்களை கண்காணிக்க 16 நவீன கேமராக்கள் பொறுத்தபட்டுள்ளதாகவும், மேலும் கண்காணிப்பு படகுகள் மற்றும் படகு இல்ல ஊழியர்கள் என 4 அடுக்கு பாதுகாப்பும் போடபட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

உதகை                                                                   22-04-19

கோடை சீசனையொட்டி உதகை படகு இல்லத்திற்கு வரும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளுக்காக படகுகள் சீரமைக்கும் பணி தீவிரம்.       

   தமிழகத்தில் உள்ள முக்கிய கோடை வாசஸ் தலங்களில் உதகையும் ஒன்று. இங்கு தற்போது கோடை சீசன் தொடங்கி இருப்பதால் இதமான காலநிலை காணபடுகிறது. எனவே குளு, குளு காலநிலையில் சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் உதகைக்கு வர தொடங்கி உள்ளனர். குறிப்பாக தமிழக சுற்றுலாத்துறை கட்டுபாட்டில் செயல்பட்டு வரும் அரசு படகு இல்லத்தில் படகு சவாரி செய்ய ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்து வருவதால் உதகை படகு இல்லத்தில் கோடை சீசன் கலைகட்டி உள்ளது. சுற்றுலா பயணிகளுக்கா மிதிபடகு சவாரி, மோட்டார் படகு சவாரி, துடுப்பு படகு சவாரி என 3 விதமாக படகு சவாரிகள் விடபட்டுள்ளது.

   தற்போது 133 படகுகள் இயங்கி வரும் நிலையில் தொடர்ந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கோடை சீசனுக்கு வரகூடும் என்பதால் படகுகள் சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. இப்பணிகள் விரைவில் முடிக்கபட்டு சுற்றுலா பயணிகளின் தேவைக்கு ஏற்ப படகுகள் விடப்படும் எனவும், படகு சவாரியின் போது அத்துமீறும் செயல்களில் ஈடுபடுவபர்களை கண்காணிக்க 16 நவீன கேமராக்கள் பொறுத்தபட்டுள்ளதாகவும், மேலும் கண்காணிப்பு படகுகள் மற்றும் படகு இல்ல ஊழியர்கள் என 4 அடுக்கு பாதுகாப்பும் போடபட்டுள்ளதாக சுற்றுலா துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பேட்டி: பிரான்ஸிஸ் - படகு இல்ல ஊழியர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.