நீலகிரி மாவட்டம் உதகையில் பாஜக சார்பில் வாகனப் பேரணி, ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தமிழ்நாடு மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், ”பாஜக, அதிமுக இடையே தொகுதி பங்கீட்டில் எந்தச் சிக்கலும் இல்லை. பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதால் நாளை மாலைக்குள் தொகுதி பங்கீடு நிறைவடைந்துவிடும். தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளையும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். அதற்கான முழு முயற்சியும் எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் ராகுல் காந்தி தொடர்ந்து சுற்று பயணம் செய்து வருவது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு “ராகுல் காந்தி பொதுமக்களை கவர்வதற்காக ஒரு கோமாளியைப் போல செயல்படுகிறார். தமிழ்நாடு, கேரளா உள்பட இந்தியா முழுவதும் உள்ள மக்கள் தலைவரையே தேடுகிறார்களே தவிர கோமாளியை அல்ல” என்று பதிலளரித்தார்.
இதையும் படிங்க: நீலகிரி தொகுதிகள் உலா: தேர்தல் 2021; எதிர்பார்ப்பும், களநிலவரமும்..!