நீலகிரி மாவட்டம், 65 விழுக்காடு வனப்பகுதி கொண்ட மாவட்டமாகும். இங்கு உள்ள காடுகளில் யானை, கரடி, சிறுத்தை காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் உள்ளன. அவை அவ்வப்போது இரை தேடியும், தண்ணீர் தேடியும் அடிக்கடி குடியிருப்புப் பகுதிகளுக்கு வருகின்றன.
அப்போது மனிதர்களைத் தாக்குவதால் உயிரிழப்புகள் ஏற்பட்ட நிகழ்வுகளும் உண்டு. ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகள் முழுவதும் காட்டெருமைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால் குடியிருப்புப் பகுதிகளுக்கு வரக்கூடிய, காட்டெருமைகள் மக்களைத் தாக்குகின்றது.
குன்னூர் அருகே உள்ள கிளிஞ்சாடா பகுதியைச் சேர்ந்த முத்தம்மாள்(42). அங்குள்ள மேரக்காய் தோட்டத்தில் பணி செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அந்தப் பகுதிக்கு வந்த ஒற்றை காட்டெருமை ஒன்று, இவரைத் தள்ளிவிட்டு ஓடியது. இதில் இவரது கைப்பகுதியில் லேசான காயம் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: திருப்பத்தூர் அருகே வனவிலங்கு அச்சுறுத்தல் - பொதுமக்கள் அச்சம்