ETV Bharat / state

வனம் காக்கும் இருவாச்சி பறவை... புத்துயிர் பெறும் மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகள்! - பர்லியார் வனப்பகுதி

Hornbill Bird: நீலகிரியில் உள்ள வனப்பகுதியில் கூடுகட்டி வாழ்ந்த இருவாச்சி பறவைகள், 15 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு வருகை தந்த நிலையில், இந்த ஆண்டு மீண்டும் வருகை தரத் துவங்கியது பறவைகள் இன ஆர்வலர்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

இறவாச்சி பறவை
Hornbill Bird
author img

By

Published : Aug 19, 2023, 1:26 PM IST

Updated : Aug 19, 2023, 3:18 PM IST

வனம் காக்கும் இருவாச்சி பறவை... புத்துயிர் பெறும் மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகள்!

நீலகிரி: மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள இயற்கைச் சூழலில் அதிக அளவு பறவைகள் வாழ்ந்து வருகிறது. மனிதர்கள் நடமாட்டம் இல்லாத பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் மட்டுமே வாழக்கூடிய HORNBILL என அழைக்கப்படும் இருவாச்சி பறவைகள் நீலகிரி மாவட்டத்தில் வாழ்ந்து வந்தாலும் இந்த பறவைகள் எண்ணிக்கை கடந்த காலங்களில் குறைந்து காணப்பட்டது.

இந்நிலையில் கீழ் கோத்தகிரி, கரிக்கையூர், பர்லியார் வனப்பகுதியில் அமைந்துள்ள இயற்கை காடுகளில் தற்போது இருவாச்சி பறவைகள் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதாக கூறப்படுகிறது. மனிதர்கள் நடமாட்டம் இல்லாத, பசுமை நிறைந்த வனப்பகுதியில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இருவாச்சி பறவைகள் அப்பகுதியில் குடியேறி கூண்டுகள் அமைத்துள்ளது. இது பறவைகள் ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சாலை வசதி இல்லாததால் பறிபோன மருத்துவர் கனவு... கண் கலங்கும் பழங்குடியின மாணவி!

உலகம் முழுவதும் 54 வகை இருவாச்சி பறவைகள் இருப்பதாக கூறப்படுகின்றன. இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகள், அருணாசலப் பிரதேசம், அந்தமான் தீவுகள், நேபாளம் ஆகிய இடங்களில் இவை அதிகளவில் காணப்படுவதாக கூறப்படுகிறது. இந்தியாவில் 9 வகை இருவாச்சி பறவைகள் உள்ளன.

இருவாச்சிப் பறவைகள் உட்கொண்டு வெளியேற்றும் எச்சத்தில் உள்ள தாவர விதைகள் உயிர்ப்புத்தன்மை மிக்கவை. இப்பறவைகளின் எச்சங்களால்தான் காட்டில் மரங்கள் பெருகுகின்றன. இப்பறவைகள் இருக்கிற காடுகளை மழைக்காடுகள் என அழைக்கிறார்கள். மழைக் காடுகள் இல்லையென்றால் இருவாச்சி பறவைகளும் இல்லை எனப் பறவை ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

வனம் வளர்வதற்கு முக்கிய காரணியாக இப்பறவைகள் இருக்கின்றன. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மரங்கள் வெட்டப்படுவதால், இருவாச்சிப் பறவைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதாகப் பறவை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். மிகவும் உயரமான மரங்களில் வசிக்கும் இருவாச்சி பறவைகள், மரங்கள் அழிக்கப்படுவதன் காரணமாக தன் இனத்தைப் பெருக்கிக்கொள்ள முடியாமல் தவிப்பதாக கூறப்படுகிறது.

இருவாச்சி பறவை இனம் அழிந்தால் மேற்குத் தொடர்ச்சி மலையில் இருக்கும் பல வகை அறிய மரங்கள் அழிந்து விடும் என்கிறார்கள் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள். வனத்தை காக்கவும், வனப்பரப்பை அதிகரிக்கவும் இப்போதுள்ள தலைமுறையினர் முயன்றால் எதிர்கால சந்ததியினர் இருவாச்சி பறவைகளை மட்டுமல்ல நம் இயற்கையையும் காக்க முடியும் என்கின்றனர் பறவை நல ஆர்வலர்கள்.

மேலும் தற்போது பர்லியார் மரப்பாலம் பகுதியில் அதிக அளவில் அத்திப்பழங்கள் காய்த்து உள்ளதால் இவைகளை உண்பதற்காக இருவாச்சி பறவைகள் இப்பகுதியில் படையெடுத்து வருகின்றன. இருவாச்சி பறவைகளை புகைப்படம் எடுக்க பறவை ஆர்வலர்களும் புகைப்பட கலைஞர்களும் தற்போது இப்பகுதியில் முகாமிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: TANUVAS counselling 2023: கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பில் சேர ஆகஸ்ட் 19 முதல் விண்ணப்பம்!

Last Updated : Aug 19, 2023, 3:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.