நீலகிரி: நீலகிாி மாவட்டம், குன்னூர் பகுதியில் அண்மைக்காலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. குறிப்பாக உணவு மற்றும் குடிநீர் தேடி, தேயிலைத் தோட்டங்களிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் கரடிகள் சா்வசாதாரணமாக உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், குன்னூர் அருகே உலிக்கல் பேரூராட்சியில் உள்ள சிஎஸ்ஐ அரசு உதவிபெறும் பள்ளியின் சமையல் அறையில் கரடிகள் புகுந்து அட்டகாசம் செய்துள்ளன. கரடிகள், சமையல் அறையில் இருந்த எண்ணெய், அரிசி, பருப்பு போன்றவற்றை சாப்பிட்டுவிட்டு சென்றதாகத் தெரிகிறது. பின்னர் பள்ளிக்கு சென்று சமையலறையைப் பார்த்த பள்ளி ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
குடியிருப்புப் பகுதிகளில் சுற்றித்திரியும் கரடிகளை கூண்டு வைத்து பிடித்து, அடர் வனப்பகுதிகளில் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: நீலகிரியில் யானை தாக்கி எஸ்டேட் காவலர் உயிரிழப்பு