நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்தக் கரடிகள் உணவு, தண்ணீர் உள்ளிட்டவற்றைத் தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் வருகின்றன.
இதனால் அவ்வபோது மனிதர்களை கரடிகள் தாக்கும் சூழல் உருவாகிறது. இந்நிலையில் குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதை வனப்பகுதியில் இருந்து அருகில் உள்ள லாஸ்ஃபால்ஸ் தேயிலை தோட்டத்திற்குள் பகல் நேரங்களில் கரடி ஒன்று உலா வந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், அந்தக் கரடி அங்குள்ள பாறையில் இரண்டு மணி நேரம் அமர்ந்து ஓய்வு எடுத்தது. இதனால் தொழிலாளர்கள் தேயிலை பறிக்க செல்ல முடியாமல் போனது. இது குறித்து குன்னூர் வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அங்கு சென்ற வனத்துறையினர் கரடியினை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
இதையும் படிக்க: 'கிறிஸ்துவும் சரி கிருஷ்ணனும் சரி இங்குதான் பிறக்கிறார்கள்'