நீலகிரி மாவட்டத்தில் சமீப காலமாக வனவிலங்குகள் தேயிலை தோட்டங்கள், குடியிருப்புகளை நோக்கி படையெடுப்பது அதிகரித்துள்ளது. அதிலும் கரடிகளின் எண்ணிக்கை அதிகம்.
இந்நிலையில் குன்னூர்— கோத்தகிரி இடையே உள்ள அளக்கரை பகுதி தேயிலை தோட்டத்தில் கரடி ஒன்று தனது இரு குட்டிகளுடன் முகாமிட்டுள்ளது.
இதனால் இப்பகுதி தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தேயிலை பறிக்க அச்சமடைந்து பணிக்கு செல்லவில்லை. இது குறித்து தகவல் அறிந்த கட்டப்பெட்டு வனச்சரக வனத் துறையினர் நிகழ்விடத்திற்கு வந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.