ETV Bharat / state

நீலகிரியில் தடையை மீறி பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் விற்பனை - தமிழ்நாடு அரசு

நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளையம் வன உயிரினங்களின் பாதுகாப்பு கருதி பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் குன்னூர் ரயில் நிலையத்தில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் விநியோகம் செய்யப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தடைசெய்யப்பட்ட ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் விநியோகம்

author img

By

Published : Aug 21, 2022, 6:23 PM IST

நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகள் வனங்களாக உள்ளதால் வன விலங்குகளின் பாதுகாப்பு கருதி காப்பாற்ற கடந்த 2019ஆம் ஆண்டு முதல் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், பிளாஸ்டிக் கரண்டிகள், முலாம் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் இலைகள், பிளாஸ்டிக் தோரணங்கள், பிளாஸ்டிக் கொடிகள், பாட்டில்கள் உள்ளிட்ட 19 வகையான பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு மக்கள் குடிநீருக்காக சிரமப்படாமல் இருக்க நீலகிரி மாவட்டத்தில் 68 வாட்டர் ஏ.டி.எம். சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.

தடைசெய்யப்பட்ட ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் விநியோகம்

இதன் மூலம் ரூ. 5 செலுத்தி 1 லிட்டர் தண்ணீர் பெற்று கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரயில்வே பார்லிமெண்ட் கமிட்டியை சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் அதன் தலைவர் ராதா மோகன் சிங் உள்ளிட்ட 15 பேர் தங்களது குடும்பத்துடன் உதகை வந்திருந்தனர். அப்போது இவர்களுக்காக நூற்றுக்கணக்கான ஒரு லிட்டர் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன. இது அங்குள்ள இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு... ஏகனாபுரம் மக்கள் ஒப்பாரி போராட்டம்...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.