நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே உள்ள மாயார் அணைக்கு செல்லும் கால்வாயில் அணை நுழைவுவாயில் பகுதியில் உள்ள முகப்பு கம்பியில் குட்டி யானை ஒன்று இறந்து கிடப்பதைப் பார்த்து அலுவலர்களுக்கு தகவல் அளித்தனர். இதனைத் தொடர்ந்து, அங்குசென்ற வனத்துறையினர் மற்றும் ஊழியர்கள் அணையில் இருந்த குட்டி யானையை மீட்டனர்.
இதுகுறித்து, வனத்துறையினர் கூறுகையில், ‘குட்டி யானை கால்வாயைக் கடக்க முயன்றபோது அடித்து செல்லப்பட்டு உயிரிழந்திருக்கலாம். எனினும் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படும், இறந்த யானை பிறந்து இரண்டு மாதங்களே ஆன குட்டி யானையாகும்’ என தெரிவித்தனர்.
பிறந்த இரண்டு மாதங்களே ஆன குட்டி யானை இறந்த சம்பவம் வனவிலங்கு ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.