ETV Bharat / state

100% கரோனா தடுப்பூசி: சுகாதார துறை  ஊழியர்களுக்கு பாராட்டு விழா - nilgiri district news

பழங்குடிகளுக்கு 100 விழுக்காடு கரோனா தடுப்பூசி செலுத்திய இந்தியாவின் முதல் மாவட்டமான நீலகிரியில் அதை பாராட்டும் விதமாக சுகாதார துறை  ஊழியர்கள், முன் கள பணியாளர்களுக்கு கேடயம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தெங்குமராடா ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் அருண் பிரசாத் பேட்டி

author img

By

Published : Jul 19, 2021, 11:22 PM IST

நீலகிரி: கரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவிய அதே வேகத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட பழங்குடியின மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி இந்தியாவுக்கே முன்மாதிரியானது நீலகிரி மாவட்டம்.

கடந்த ஜூன் மாதம் இறுதிக்குள் 18 வயதுக்கு மேற்பட்ட 21 ஆயிரத்து 700 பழங்குடியினருக்கு தடுப்பூசி போட்டு முடிக்க முடிவு செய்யபட்டது. அதன்படி 30 நாள்களில் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போட்டு முடிக்கப்பட்டது.

மேலும் 10 ஆயிரம் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதனால் தமிழ்நாட்டில் அனைத்து பழங்குடியினருக்கும் தடுப்பூசி போடப்பட்ட முதல் மாவட்டம் என்ற பெயரை நீலகிரி மாவட்டம் பெற்றது.

தெங்குமராடா ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் அருண் பிரசாத் பேட்டி

அதற்காக இரவும், பகலுமாக பணியாற்றிய மருத்துவர்கள், சுகாதாரத் துறை ஊழியர்கள், முன்கள பணியாளர்கள் என 371 பேருக்கு பாராட்டு விழா இன்று உதகையில் நடைபெற்றது.

அதில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு கேடயம், பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

முன்னதாக பேசிய ராமசந்திரன், நீலகிரி மாவட்டத்தில் கரோனா தடுப்பு பணிகள் சிறப்பாக கடைபிடிக்கப்படுவதாகவும் இதுவரை கரோனா விதிகளை பின்பற்றாதவர்களிடமிருந்து ஒரு கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

சிறப்பாக பணியாற்றியதால் தங்களுக்கு கேடயம், பாராட்டு சான்றிதழ் வழங்கியதற்கு சுகாதார துறையினர் நன்றி தெரிவித்தனர்.

இதையும் படிங்க: 'சைரன் காரில் மகன்... சைக்கிளில் பெற்றோர்' - எளிமை மாறாத வெள்ளந்தி மனிதர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.