ETV Bharat / state

'அணுக்கழிவுகளால் பாதிப்பு இல்லை; அணு உலைகளை மூட அவசியமில்லை!' - கூடங்குளம் அணு மின்நிலையம்

நீலகிரி: அணுக்கழிவுகளால் எந்த பாதிப்பும் இல்லை; அதனால் இந்தியாவில் உள்ள அணு உலைகளை மூட வேண்டிய அவசியம் இல்லை என இந்திய அணுசக்தி கழகத்தின் முன்னாள் தலைவர் எம்.ஆர். சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

former india atomic power association srinivasan
author img

By

Published : Jul 28, 2019, 9:55 AM IST

நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெற்ற தனியார் புத்தக வெளியீட்டு விழாவில் இந்திய அணுசக்தி கழகத்தின் முன்னாள் தலைவர் எம்.ஆர். சீனிவாசன் கலந்துகொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், "கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தற்போது மூன்றாவது, நான்காவது அணு உலைகள் அமைக்கும் பணி நிறைவடையும் தருவாயில் இருக்கிறது. ஐந்து, ஆறு அணு உலைகள் அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது.

இன்னும் ஐந்து ஆண்டுகளில் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் மின் உற்பத்தி ஆறாயிரம் மெகாவாட்டை எட்டும். அணு உலைகளிலிருந்து வெளியேறும் அணுக்கழிவுகளால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. தற்போது சேகரிக்கப்படும் அணுக்கழிவுகள் அதே இடத்தில் சுத்திகரிக்கப்பட்டு சிறு, சிறு கற்களாக மாற்றும் திட்டம் இருக்கிறது.

அணு உலைகளில் அதிக பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கபட்டுள்ளது. எனவே அணு உலைகளை மூட வேண்டிய அவசியம் இல்லை.

அமெரிக்க, ஃபிரான்ஸ், சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் செயல்பட்டுவரும் அணு உலைகளை அந்த நாடுகள் மூட மாட்டார்கள்; எனவே இந்தியாவும் மூடாது. மேலும் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் 700 மெகாவாட் திறன் கொண்ட பத்து அணு உலைகளை அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன" எனத் தெரிவித்தார்.

இந்திய அணுசக்தி கழகத்தின் முன்னாள் தலைவர் எம்.ஆர். சீனிவாசன் பேட்டி

Intro:OotyBody:
உதகை 27-07-19
இந்தியாவில் உள்ள அணு உலைகளை மூட வேண்டிய அவசியம் இல்லை எனவும் அணு கழிவுகளால் எந்த பாதிப்பும் இல்லை என்றும் இந்திய அணு சக்தி கழகத்தின் முன்னாள் தலைவர் எம்.ஆர்.சீனிவாசன் உதகையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்…..
உதகையில் நடைபெற்ற தனியார் புத்தக வெளியீட்டு விழாவில் இந்திய அணு சக்தி கழகத்தின் முன்னாள் தலைவர் எம்.ஆர்.சீனிவாசன் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்: கூடங்குளம் அணு மின்நிலையத்தில் தற்போது 3 மற்றும் 4–வது அணு உலைகள் அமைக்கும் பணி நிறைவடையும் தருவாயில் இருப்பதாகவும், 5 மற்றும் 6–வது அணு உலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறினார். இன்னும் 5 ஆண்டுகளில் கூடங்குளம் அணு மின்நிலையத்தின் மின் உற்பத்தி 6 ஆயிரம் மெகாவாட்டை எட்டும் என்று அவர் தெரிவித்தார். மேலும் அணு உலைகளிலிருந்து வெளியேறும் அணு கழிவுகளால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் தற்போது சேகரிக்கபடும் அணு கழிவுகள் அதே இடத்தில் சுத்திகரிக்கபட்டு சிறு,சிறு கற்களாக மாற்றும் திட்டம் இருப்பதாக கூறிய அவர் அணு உலைகளில் அதிக பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கபட்டுள்ளதாக தெரிவித்தார்.
எனவே அணு உலைகளை மூட வேண்டிய அவசியம் இல்லை என்ற அவர் அமெரிக்க, பிரான்ஸ், சீனா, ரஷ்யா போன்ற நாடுகளில் செயல்பட்டு வரும் அணு உலைகளை அந்த நாடுகள் மூடமாட்டார்கள் எனவே இந்தியாவும் மூடாது என்றார். மேலும் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் 700 மெகாவாட் திறன் கொண்ட 10 அணு உலைகளை அமைக்கும் பணிகள்; நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
பேட்டி: எம்.ஆர்.சீனிவாசன் - இந்திய அணு சக்தி கழகத்தின் முன்னாள் தலைவர்
Conclusion:Ooty
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.