நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர், நாடுகாணி, ஓவேலி பகுதிகளில் காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவது வழக்கமாகியுள்ளது. நேற்று இரவு வனத்திலிருந்து திடீரென்று ஒற்றை காட்டு யானை கூடலூரை அடுத்த நாடுகாணி சோதனை சாவடிக்கு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது அங்கு குழுமியிருந்த பொதுமக்கள், காவல் துறையினர் யானையை கண்டு அச்சமடைந்தனர். மேலும் சிலர் அலறி அடித்து ஓடினர்.
இதைத் தொடர்ந்து யானை அவர்களை கடந்து அருகில் இருந்த கடைக்களுக்குள் நுழைய முயன்றபோது கடைக்காரர்கள் கூச்சலிட்டதால் அஞ்சிய காட்டு யானை மீண்டும் வனப்பகுதிக்குள் திரும்பிசென்றது.
இதையும் படியுங்க: 'அப்பா சொல்லித் தந்த பாடம் இதுதான்' - மனம் திறந்த துல்கர் சல்மான்!