நீலகிரி: குன்னூர் காட்டேரி அருகே நஞ்சப்பா சத்திரம் பகுதியில் கடந்த 8ஆம் தேதியன்று ராணுவத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் உயிரிழந்தனர்.
விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் பாகங்கள் பலவற்றை ராணுவ வீரர்கள், விமானப்படை வீரர்கள் சுமந்துசென்று லாரிகளில் ஏற்றினார்கள்.
அலுவலர்கள் ஆலோசனை
ஹெலிகாப்டரின் இறக்கைகள், பெரிய இயந்திரங்கள் அகற்றப்பட்டு தனியாக வைக்கப்பட்டுள்ளது. சாலை சீரமைப்பதில் தாமதம் ஏற்பட்டு வரும் நிலையில், இவற்றை ஹெலிகாப்டரில் கொண்டுசெல்வது குறித்து அலுவலர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில், நேற்று காலையில் ஹெலிகாப்டர் ஒன்று பல முறை குன்னூர் பகுதிகளில் வட்டம் அடித்தது. மேலும், நஞ்சப்பா சத்திரம் பகுதியிலும் மிக உயரத்தில் பறந்தது. இங்கு ஆய்வுசெய்வதற்காக உயர் அலுவலர்கள் ஹெலிகாப்டரில் வந்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட பாகங்களை சாலை வழியாகக் கொண்டுசெல்வதா அல்லது ஹெலிகாப்டரில் கொண்டுசெல்வதா என விரைவில் விமான படையினர் ஆய்வுசெய்து கூறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: MIG-21 Crash: ராணுவ விமானம் விபத்து: ஒருவர் பலி