நீலகிரி மாவட்டம் உதகை மார்க்கெட் டீக்கடை ஒன்றில், நொண்டிமேடு பகுதியைச் சேர்ந்த ஜோதிமணி என்பவர் டீ குடிக்கச் சென்றுள்ளார். அங்குச் சென்ற அவர், டீக்கடையில் பணிபுரியும் பாலக்காட்டைச் சேர்ந்த தேவதாஸ் என்பவரை கரோனா தொற்று காரணமாக அருகில் வர வேண்டும் என எச்சரித்துள்ளார். அதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, அதில் ஆத்திரமடைந்த தேவதாஸ், வெங்காயம் வெட்டும் கத்தியை வைத்து ஜோதிமணி கழுத்தில் குத்தியுள்ளார்.
அதில் படுகாயமடைந்த ஜோதிமணியை அருகிலிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்த B1 காவல் நிலையத்தினர் சம்பவ இடத்திற்கு சென்று தேவதாசை கைது செய்து, கொலை செய்ய பயன்படுத்திய கத்தியை பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: கேவிட்-19 அச்சம்: வெறிச்சோடிய உதகை