நீலகிரி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக குன்னூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட கழக செயலாளர் எஸ் கலைச்செல்வன் தலைமை வகித்தார்.
அப்போது கூடலூர், குன்னூர், உதகை, கோத்தகிரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். அதில் வரயிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆலோசனைகளை வழங்கினர்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியைக் கண்டு துவண்டு விட வேண்டாம். வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த நகரமன்ற உறுப்பினர்களை பொதுமக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என துணை செயலாளர் கே.என் துரை கூறினார்.
மேலும், குன்னூர் நகர செயலாளர் சையத் முபாரக், கூடலூர் நகர செயலாளர் உள்ளிட்ட கழகத்தினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க : முதலமைச்சர் பதவிக்காக எடப்பாடி தவழ்ந்தது அனைவருக்கும் தெரியும் - டிடிவி சாடல்