நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வெலிங்டன் கண்டோன்மெண்ட் வாரியம் ராணுவ பகுதிகளை உள்ளடக்கியுள்ளன.
அங்கு 7 வார்டுகளில் 22 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகம் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கண்டோன்மெண்ட் வாரியத்தில், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
இந்நிலையில் 2015ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 7 வார்டுகளிலும் அதிமுக வெற்றி பெற்றது. அவர்களின் பதவிக்காலம் 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முடிவடைந்தது. பின்னர் தேர்தல் நடத்தப்படாமல் ஓராண்டுக்கு பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டது.
பிப்ரவரி 10ஆம் தேதியுடன் அவர்களின் பதவிக்காலம் நிறைவு பெறுகிறது. இது குறித்து கண்டோன்மெண்ட் வாரிய முதன்மை நிர்வாக அலுவலர் பூஜா பலிச்சா கூறுகையில், "பிப்ரவரி 10ஆம் தேதியுடன் போர்டு கலைக்கப்படும். தொடர்ந்து இயக்குநர் தலைமையில் நிர்வாகம் செயல்படும். அரசு அனுமதி அளித்தவுடன் தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படுவர்" என்றார்.
இதையும் படிங்க: காட்டு யானைக்கு தீ வைத்த சம்பவம்: உண்மை கண்டறியும் குழு விசாரணை!