நீலகிரி : தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் ஆகியவற்றில் உள்ள 12,838 பதிவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
வேட்புமனுக்கள் நிராகரிப்பு, திரும்பப் பெற்றதுபோக மொத்தம் 57,778 பேர் தேர்தலில் போட்டியிட்டனர். இத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று (பிப். 22) நடைப்பெற்றது.
இந்நிலையில், நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட 10ஆவது வார்டு கணியம் வயல் பகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட எமிபோல் என்பவர் 450 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் வேட்பாளர் பூவி என்பவரது கணவர் நாணி என்கிற நவ்ஷாத் அலி தேர்தல் தோல்வியால் ஆத்திரமடைந்து அதே பகுதியைச் சேர்ந்த திமுக தொண்டர் சபீர் என்பவரை கத்தியால் குத்தியதில் அவர் உயிரிழந்தார். காயமடைந்த அஸ்கர் அலி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். தலைமறைவான நவ்ஷாத் அலியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.