நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பல்வேறு முறைகேடுகளை தடுத்து வருவதுடன், விதிமீறல்களையும் தடுக்க நடவடிக்கை எடுத்துவருகிறார். குறிப்பாக நெகிழித் தடையை முழுவதுமாக அமல்படுத்தி சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் உள்ளிட்டவைகளை துரிதமாக செயல்படுத்திவருகிறார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக நீலகிரி மாவட்ட நிர்வாகத்தின் மீது அவதூறு பரப்பும்விதமாக சமூக வலைதளங்களில் சிலர் செய்திகளை பதிவிட்டுவருகின்றனர். போலி கணக்குகள் மூலமாக இந்த அவதூறு செய்திகள் பரப்பப்படுகிறது. அதேபோல சிலர் பத்திரிக்கையாளர் என்று கூறி கட்டுமான பணி நடைபெறும் இடங்களுக்குச் சென்று பணம் கேட்டு மிரட்டுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதனையடுத்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா செய்தியாளர்களைச் சந்தித்து அவதூறு பரப்புபவர்கள், போலி பத்திரிக்கையாளர்கள் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு கேஷ் பேக்!