நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக கடும் பனிமூட்டம் நிலவிவருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், கோவையில் இருந்து கட்டுமான பொருட்களை ஏற்றிவந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு நீண்ட வரிசையில் வாகனங்கள் நின்றன.
பின்னர் பலுதூக்கும் இயந்திரத்தின் உதவியுடன் லாரி மீட்கப்பட்டது. இதேபோன்று வெலிங்டன் பிருந்தாவன் பகுதியிலும் பிக்கப் ஜீப் ஒன்று மேகமூட்டம் காரணமாக நிலை தடுமாறி விபத்துக்குள்ளானது. இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சாக்லெட் கொடுத்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; இளைஞருக்கு வலைவீச்சு!